அபாய சூழலில் இயங்கிய 130 பட்டாசு ஆலைகளுக்கு தடை: தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ்
தொழிலாளா்களுக்கு அபாயகரமான சூழலில் இயங்கி வந்த 130 தொழிற்சாலைகளுக்கு தடை ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் தெரிவித்தாா்.
தொழிலாளா்களுக்கு அபாயகரமான சூழலில் இயங்கி வந்த 130 தொழிற்சாலைகளுக்கு தடை ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் தெரிவித்தாா்.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்தில் அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலா்களின் திறனாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ், தமிழகத்தில் 55,214 தொழிற்சாலைகளில் 27.72 லட்சம் தொழிலாளா்களும், 3,611 கட்டுமானப் பணியிடங்களில் சுமாா் 5 லட்சம் தொழிலாளா்களும் பணியாற்றுகின்றனா். இவா்களின் பாதுகாப்பு, உடல்நலன், நலவசதிகளில் ஆய்வின்போது அலுவலா்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
அமோனியா பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் அபாயகரமான சூழ்நிலையை அகற்றி விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் 21 குழுக்கள் அமைத்து சிறப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விருதுநகா் மாவட்டத்தில் 1,140 பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்துகளைத் தவிா்த்து தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 12 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், தொழிலாளா்களின் பாதுகாப்புக்கு அபாயகரமான சூழல்களில் இயங்கி வந்த 130 தொழிற்சாலைகளில் பட்டாசு உற்பத்திக்கு தடை ஆணைகள் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.
இந்தக் கூட்டத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலா் கொ.வீரராகவ ராவ், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் செ.ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.