நீட் தேர்வு ரத்தே நிரந்த தீர்வு: மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும் என மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது...
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்கீழ் (சிஜேபி) தில்லியில் திங்கள்கிழமை ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான இளைஞா்கள், நாடாளுமன்றம் நோக்கி நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். பெண்கள் உள்பட பலரின் மீதும் தடியடி நடத்தினர். இதனால் பாதுகாப்புப் படையினா் மற்றும் போராட்டக்காரா்கள் இடையே வெடித்த மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈா்த்தது.
இந்த நிலையில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
புது தில்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது.
நீட் தேர்வு பெருமளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எச்சரித்த முதல் கட்சி திமுக. அதனால்தான், இந்த தேர்வால் ஏற்படும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, ஆரம்பத்திலிருந்தே திமுக இதனை எதிர்த்து வருகிறது.
சமூக நீதியைக் காப்பதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகவும், முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வித்திட்டதாகவும் திகழும் தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை: நீட்தேர்வு ஒழிப்பு ஆகும்.
மற்ற எந்தக் கோரிக்கைகளை விடவும், நீட் தேர்வை ரத்து செய்வதே இந்தப் போராட்டங்களின் மையப் பொருளாக அமைய வேண்டும்.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும். நீட் தேர்வை தடைசெய்வோம். மாணவர்களைகாப்போம் என அவர் கூறியுள்ளார்.
DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.