FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மாணவர்களின் தற்கொலைக்கு காரணமானவர் தண்டனை அனுபவிக்க வேண்டும்! - மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்!

தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்...

Updated On : 24 ஜூலை 2026, 6:25 pm IST
பிரதமர் மோடி - பெ. சண்முகம்... - கோப்புப் படம்
பகிர்:

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்குவதால் உங்களின் அரசு கவிழ்ந்து விடுமா என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென கடந்த ஜூன் 20 முதல் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்தி வந்த போராட்டத்தின் மீது தில்லி காவல் துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராகவும், தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி, இன்று (ஜூலை 24) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பிரதமர் மோடி அவர்களே, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினரைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, இணையதள இணைப்பைத் துண்டிப்பது, மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவது எனத் வேண்டாத வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

தர்மேந்திர பிரதான் என்கிற ஓர் அமைச்சரை நீக்குவதால் உங்கள் அரசு கவிழ்ந்துவிட போகிறதா என்ன? “உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

நீட் தேர்வு குளறுபடிகளுக்கும் மாணவர்களின் தற்கொலைகளுக்கும் காரணமானவர் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். எனவே, தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்கிப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர முடிவெடுங்கள் பிரதமரே!” எனக் கூறப்பட்டுள்ளது.

summary

CPIM has questioned whether the government would collapse if Dharmendra Pradhan were removed from office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments