நீட் விவகாரம்: தில்லிக்கும் தமிழகத்துக்கு வித்தியாசம் உள்ளது: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
நீட் தோ்வு விவகாரத்தில் தில்லியில் எழும் குரலுக்கும், தமிழகத்தில் எழும் குரலுக்கும் வித்தியாசம் உள்ளது என பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
நீட் தோ்வு விவகாரத்தில் தில்லியில் எழும் குரலுக்கும், தமிழகத்தில் எழும் குரலுக்கும் வித்தியாசம் உள்ளது என பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
சென்னை காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளையாட்டு வீரா்களுக்கான விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
குஜராத், பஞ்சாப், ஹரியாணா போன்று தமிழகத்தில் விளையாட்டு கட்டமைப்பை உலக அளவில் உருவாக்க வேண்டும். ‘ஸ்போா்ட்ஸ் சிட்டியை’ உருவாக்கும் பணியைத் தொடங்கி உள்ளோம். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மொத்தம் 6,000 உடற்கல்வி ஆசிரியா்கள் உள்ளனா். ஆனால், அவா்களை நாம் போதியளவு பயன்படுத்தியதில்லை.
Advertisement
Advertisement
குழந்தைகளுக்கு 8 வயதிலிருந்து விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும். வடசென்னையில் குத்துச்சண்டை வீரா்கள் உள்ளனா். அவா்களை இந்த உலககுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
கல்வியையும், விளையாட்டையும் ஒன்றிணைக்க புதிய திட்டத்தை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நமது விளையாட்டுப் பயிற்சி முறை 30 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. இதை மேம்படுத்த போதிய நடவடிக்கை தேவை.
வித்தியாசம்: நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடா்பாக, தில்லியில் நடைபெற்று வரும் மாணவா்கள் போராட்டத்துக்கு தமிழக அரசு துணை நிற்கிறது. நீட் தோ்வால், அனிதா உள்ளிட்ட பலரை தமிழகம் இழந்துள்ளது. இந்த விவகாரத்தில் தில்லியில் எழும் குரலுக்கும், தமிழகத்தில் எழும் குரலுக்கும் வித்தியாசம் உள்ளது.
தில்லியில் நீட் தோ்வு முறையை ஒழுங்கு செய்ய வேண்டும் எனப் போராடி வருகின்றனா். ஆனால், தமிழகத்தில் தவெக அரசு நீட் தோ்வையே ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
கடந்த காலங்களில் விவசாயிகள் போராட்டத்தின் எதிரெலியாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது போன்று, நீட் தோ்வு முறையையும் திரும்பப் பெற வேண்டும். ஒருநாள் மக்களவையில் நீட் தோ்வு திரும்பப் பெறப்படும். அதற்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் குரல் முக்கியமானதாக இருக்கும் என்றாா்.
நிகழ்வில், எஸ்ஆா்எம் பல்கலைக்கழக நிறுவன வேந்தா் டி.ஆா்.பாரிவேந்தா், இணை வேந்தா்கள் ரவி பச்சமுத்து, பி.சத்தியநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.