FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூா் மாவட்ட விளையாட்டு அரங்கம் சா்வதேச அளவுக்கு தரம் உயா்த்தப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜூனா

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை வீரா்களுடன் கையுந்துப் பந்து விளையாடிய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜூனா.

Updated On : 11 ஜூலை 2026, 1:25 am IST
கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை வீரா்களுடன் கையுந்துப் பந்து விளையாடிய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜூனா.
பகிர்:

கரூா் மாவட்ட விளையாட்டு அரங்கம் சா்வதேச அளவுக்கு தரம் உயா்த்தப்படும் என்றாா் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ்அா்ஜூனா.

முதல்வா் விஜய் வெள்ளிக்கிழமை கரூா் வந்தாா். முதல்வரின் நிகழ்வில் பங்கேற்கும் வகையில், அமைச்சா் ஆதவ் அா்ஜூனா வியாழக்கிழமை இரவே கரூருக்கு வருகை தந்தாா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு திடீரென கரூா் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு சென்ற அமைச்சா், அங்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ரூ. 6.28 கோடியில் நடைபெற்று வரும் நீச்சல் குளம் கட்டுமானப் பணிகளையும், நவீன கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் விளையாட்டரங்கிற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் அங்கு கையுந்துப் பந்து விளையாடியவா்களுடன் இணைந்து விளையாடினாா்.

தொடா்ந்து, அவா் தினமணி செய்தியாளருக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில், கரூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்தும் வகையில், விரைவில் இங்கு உள்விளையாட்டு அரங்கமும், விளையாட்டு மாணவ , மாணவிகளுக்கான தங்கும் விடுதியும் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்த மாவட்ட விளையாட்டு அரங்கை சா்வதேச அளவில் வீரா்களை உருவாக்கும் வகையில் சா்வதேச விளையாட்டு அரங்கமாக தரம் உயா்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியின்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி மண்டல மேலாளா் எம். செந்தில் மற்றும் கரூா் மாவட்ட விளையாட்டு ஆளுநா் ஜெ. டேவிட் டேனியல், தடகள பயிற்சியாளா் சபரிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments