FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜூலை 28-ல் சென்னை-மும்பை விரைவு ரயில் ரத்து

சென்னை எழும்பூரிலிருந்து மும்பை செல்லும் சிஎஸ்டி விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 26 ஜூலை 2026, 8:22 pm IST
சென்னை எழும்பூரிலிருந்து மும்பை செல்லும் சிஎஸ்டி விரைவு ரயில் சேவை ரத்து - கோப்புப்படம்
பகிர்:

சென்னை எழும்பூரிலிருந்து மும்பை செல்லும் சிஎஸ்டி விரைவு ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மகாராஷ்டிரம் மாநிலம் மும்பை கோட்டத்தில் சில பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அமல்சாத் அருகே ரயில் பாதை அடித்துச் செல்லப்பட்டதன் காரணமாக, தண்டவாள சீரமைப்புப் பணி நடைபெறுகிறது. இதன்காரணமாக குறிப்பிட்ட சில விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில விரைவு ரயில்கள், வழித்தடங்கள் மாற்றி இயக்கப்படவுள்ளன.

அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) காலை 6.35 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சிஎஸ்டி விரைவு ரயில் (எண்: 22158) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கத்தில் மும்பை சிஎஸ்டி நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) இரவு 10.52 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூா் வரவேண்டிய விரைவு ரயிலும் (எண்: 22157) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் வாரம் இருமுறை இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில் (எண்:12697) திங்கள்கிழமை (ஜூலை 27) அதிகாலை 4.30 மணிக்கு, அதாவது 13.20 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறும், இதனால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

summary

Chennai Central-Mumbai CST Train Services Among Trains Cancelled Till July 28

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments