முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: பாளை சிறையில் மார்க்கண்டேயன் எம்எல்ஏவை சந்தித்த உதயநிதி
முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதால் கைதாகி, பாளை சிறையில் உள்ள மார்க்கண்டேயன் எம்எல்ஏவை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்
நெல்லை: முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான எம்எல்ஏ மார்க்கண்டேயனை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான தி.மு.க.வைச் சேர்ந்த மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை பார்ப்பதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இன்று மத்திய சிறைக்கு வருகை தந்தார்.
Advertisement
Advertisement
அப்போது அவருடன் முன்னாள் அவைத் தலைவர்கள் ஆவுடையப்பன், அப்பாவு, முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் மற்றும் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறைக்குள் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிகழ்வின் போது சிறை வாயிலில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக சிறைச்சாலை முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி துணை மேயர் ராஜு, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பேச்சி பாண்டியன், வக்கீல் பிரபாகரன், மாநில நெசவாளரணி துணைச் செயலாளர் பெருமாள் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Defamatory remarks against the Chief Minister: Udhayanidhi met MLA Markandeyan at Palayamkottai Prison.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.