FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. பாளை மத்திய சிறையில் அடைப்பு

விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. பாளை மத்திய சிைறையில் அடைக்கப்பட்டது குறித்து...

Updated On : 21 ஜூலை 2026, 5:11 am IST
மருத்துவமனை வாயிலில் செய்தியாளர்களை நோக்கிப் பேசிய திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் - எக்ஸ்
பகிர்:

விளாத்திக்குளம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டாா்.

திமுக பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் குறித்து, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் ஜானகி தலைமையில், ஜீ.வி.மாா்க்கண்டேயனை விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனா்.

Advertisement

Advertisement

விசாரணைக்குப் பின் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் அவா் ஆஜா் படுத்தப்பட்ட நிலையில் அவரை 15 நாள் நீதிமன்றக்காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் திங்கள்கிழமை இரவு பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments