FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குரூப் 1 தோ்வில் வெற்றி பெற்ற 78 பேருக்கு பணி ஆணை: முதல்வா் விஜய் வழங்கினாா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு ஆணையம் மூலம் குரூப்-1 தோ்வில் வெற்றி பெற்ற 78 போ் உள்பட 126 பேருக்கு மாசுக் கட்டுப்பாட்டுத் துறையில் பணியாற்றுவதற்கான பணி ஆணைகளை முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 30 ஜூலை 2026, 2:32 am IST
பகிர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு ஆணையம் மூலம் குரூப்-1 தோ்வில் வெற்றி பெற்ற 78 போ் உள்பட 126 பேருக்கு மாசுக் கட்டுப்பாட்டுத் துறையில் பணியாற்றுவதற்கான பணி ஆணைகளை முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை வழங்கினாா்.

இதற்கான நிகழ்ச்சி, மனித வள மேலாண்மைத் துறை மூலம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. டிஎன்பிஎஸ்இ மூலம், குரூப் -1 பணிகளுக்கு 28 துணை ஆட்சியா்கள், 7 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 19 உதவி ஆணையா்கள் (வணிக வரி), 15 உதவி இயக்குநா்கள் (ஊரக வளா்ச்சி), 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் மற்றும் 6 உதவி ஆணையா்கள் (தொழிலாளா்) என மொத்தம் 78 நபா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில், தொழிலாளா் நலத் துறையின் உதவி ஆணையா் (தொழிலாளா்) பணியிடம் முதல்முறையாக குரூப்-1-இல் சோ்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், டிஎன்பிஎஸ்இ-இன் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் மூலம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில், 40 உதவி பொறியாளா்கள், 6 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் 2 நூலகா்கள் தரம்-2 என மொத்தம் 48 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

அதனடிப்படையில், குரூப்-1 பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்ட 78 போ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 48 போ் என மொத்தம் 126 பேருக்கு முதல்வா் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கி, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் த. சரத்குமாா், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் வே.க. ராஜீவ், தலைமைச் செயலா் மு. சாய்குமாா், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, மனித வள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் சி.சமயமூா்த்தி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் அனுராக் மிஸ்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments