வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி! விடியோ வெளியிட்ட இளையராஜா!!
வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி இளையராஜா விடியோ வெளியிட்டது பற்றி...
நேரிலும் செய்திகள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி என இளையராஜா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜா இன்று(ஜூன் 2) தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதையடுத்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அதேபோல பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து கூறினர்.
Advertisement
Advertisement
இளையராஜாவும் வீட்டிற்கு வெளியே வந்து ரசிகர்கள் அனைவரின் வாழ்த்துகளையும் பெற்று நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.
அதேபோல முதல்வர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்கள் மூலமாக வாழ்த்து கூறிய நிலையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இளையராஜா ஒரு விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
விடியோவில் "பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க நேரில் வந்திருந்தும் செய்திகள் மூலமாகவும் வாழ்த்துத் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முக்கியமாக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அவருக்கு நன்றி.
என் மீது இவ்வளவு அன்பும் பாசமும் வைத்து நாடு முழுவதிலும் இருந்து, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசியுள்ளார்.
Thank you to everyone who sent their wishes: Ilaiyaraaja releases a video
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.