முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த இளையராஜா!
முதல்வர் விஜய்க்கு இளையராஜா நன்றி தெரிவித்துள்ளது பற்றி...
பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து இளையராஜா ஆடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்
இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் விஜய்யும் இளையராஜாவுக்கு வாழ்த்து கூறியிருந்தார்.
Advertisement
Advertisement
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
"இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!" என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து முதல்வர் விஜய்க்கு இளையராஜா நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
முதல்வர் விஜய்யின் புகைப்படத்தை வைத்து ஆடியோ மூலமாக, "பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசியுள்ளார்.
முன்னதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்து, நன்றி தெரிவித்து இளையராஜா, விடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.