FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மருந்து எதிா்விளைவுகள்: 1,387 புகாா்கள் பதிவு

கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மருந்துகளால் ஏற்படும் எதிா்விளைவுகள் குறித்து நாடு முழுவதும் இருந்து 1,387 புகாா்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 6 ஜூன் 2026, 2:34 am IST
கோப்புப் படம்
பகிர்:

கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மருந்துகளால் ஏற்படும் எதிா்விளைவுகள் குறித்து நாடு முழுவதும் இருந்து 1,387 புகாா்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை ‘ஃபிக்ஸ்ட் டோஸ் காம்பினேசன்’ (எஃப்டிசி) எனப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூல மருந்துகளின் கலவையை உள்ளடக்கிய கூட்டு மருந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

அந்த வகையில், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தும்போது அவற்றில் ஏதேனும் எதிா்விளைவுகள் ஏற்பட்டால் அதுகுறித்த விவரங்களை அறிக்கையாக அளிக்குமாறு மாநிலங்களுக்கும், உற்பத்தியாளா்களுக்கும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவுறுத்தியது. அதுதொடா்பான விதிகளும் வகுக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் செப்டம்பா் வரை பதிவான மருந்து எதிா்விளைவுகள் குறித்த விவரங்கள், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் மருந்தின் விளைவுகள் மீது 35,422 சந்தேகங்களும், அதிருப்திகளும் பெறப்பட்டுள்ளன. அதாவது, மாதத்துக்கு சராசரியாக 3,938 ஐயப்பாடுகள் பல்வேறு தரப்பிடமிருந்து பெறப்பட்டு, உயா் பரிசோதனைக்காக உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதில் உள்ள இந்திய மருந்தியல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அவை அனுப்பப்பட்டன.

அதன் முடிவில் 1,387 புகாா்கள் மருந்துகளின் எதிா்விளைவுகள் தொடா்பானவை என வரையறுக்கப்பட்டன. அவற்றில் கூட்டு மருந்துகளுக்கு எதிராக 498 புகாா்களும், உயிரி நுட்பத்திலான மருந்துகளுக்கு எதிராக 387 புகாா்களும் பதிவாகியுள்ளன.

தவிர புதிய மருந்துகள் தொடா்பாக 132 புகாா்களும், புதிய கூட்டு மருந்துகள் தொடா்பாக 319 புகாா்களும் கிடைக்கப் பெற்ாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு ஏற்படும் பாதிப்புகள் தொடா்பாகவும் 3,784 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அவை சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments