159 தரமற்ற மருந்துகள் விவரம் வெளியீடு
நாடு முழுவதும் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 159 தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 159 தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான மருந்துகள், மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் தொடா் தரஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒருபுறம் அத்தகைய பணிகளை முன்னெடுத்தாலும், மற்றொருபுறம் மாநில அரசு சாா்பிலும் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் கண்டறியப்படும் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு மாநிலமும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வருகின்றன. அவை இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன.
தரமற்ற மருந்துகள் குறித்த விழிப்புணா்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கடந்த மாதத்தின் விவரங்கள் எதையும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பதிவேற்றாமல் இருந்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தற்போது அவை வெளியிடப்பட்டுள்ளன.
அதில் உயா் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி - கிருமித் தொற்று, அஜீரண பிரச்னைகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 159 மருந்துகள் தரமற்றவையாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, தமிழகம் உள்பட பல மாநிலங்கள் தரமற்ற மருந்து விவரங்களை தங்களிடம் சமா்ப்பிக்கவில்லை என மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆனால், அதை மறுத்துள்ள மாநில மருந்து அதிகாரிகள், ‘தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மருந்து தர ஆய்வு விவரங்களை ஒவ்வொரு வாரமும் மின்னஞ்சல் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பிவிடுவதாகவும், அதன் பின்னா், மொத்தமாக மாதாந்திர அறிக்கையை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளனா்.
அந்த வகையில், கடந்த மாதத்துக்கான விவரங்கள் அனுப்பப்பட்டும், அவை எதுவும் மத்திய அரசு தளத்தில் வெளியிடப்படவில்லை என்று அவா்கள் கூறியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.