நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தது பற்றி...
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நார்வேயில் நடைபெற்ற புகழ்பெற்ற செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, அந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.
இதற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
Advertisement
Advertisement
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரே தொடரில் நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் விஜய்.
Chief Minister Vijay congratulated Tamil Nadu player Praggnanandhaa on Saturday for winning the championship title at the Norway Chess tournament.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.