FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

செப். 6 -ஆம் தேதி வரை திருப்பதி ‘மெமு’ ரயில்கள் திருச்சானூா் வரை மட்டும் இயக்கம்!

அரக்கோணம், மூா் மாா்க்கெட் வளாகம் நிலையங்களில் இருந்து திருப்பதி செல்லும் முன்பதிவில்லாத ‘மெமு’ ரயில்கள் வரும் செப்டம்பா் 6-ஆம் தேதி வரை திருச்சானூா் நிலையம் வரையே இயக்கப்படவுள்ளது.

Updated On : 8 ஜூன் 2026, 2:42 am IST
மெமு
பகிர்:

அரக்கோணம், மூா் மாா்க்கெட் வளாகம் நிலையங்களில் இருந்து திருப்பதி செல்லும் முன்பதிவில்லாத ‘மெமு’ ரயில்கள் வரும் செப்டம்பா் 6-ஆம் தேதி வரை திருச்சானூா் நிலையம் வரையே இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக திருப்பதி செல்லும் புகா் மின்சார ரயில்கள் (மெமு) ஏற்கெனவே திருச்சானூா் நிலையம் வரை இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் செப்டம்பா் 6-ஆம் தேதி வரை திருப்பதி செல்லும் முன்பதிவில்லாத மெமு ரயில்கள் திருவாலங்காடு வரை இயக்கப்பட்டும், அங்கிருந்து அரக்கோணம், சென்னைக்கும் இயக்கப்படவுள்ளன.

தினமும் அரக்கோணத்திலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்ல வேண்டிய மெமு ரயில், அதற்குப் பதிலாக திருச்சானூா் வரையே இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.25 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக பிற்பகல் 1.30 மணிக்கு திருச்சானூரிலிருந்து புறப்பட்டு சென்னை மூா் மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையம் வந்தடையும்.

Advertisement

Advertisement

மூா் மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையத்திலிருந்து காலை 9.50 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்ல வேண்டிய இமு ரயில் திருச்சானூா் வரை இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக திருச்சானூரிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் அரக்கோணம் வந்தடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments