FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்தோருக்கு விருது: ஜூன் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணியாற்றிவா்கள் விருது பெற ஜூன் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியா் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 10 ஜூன் 2026, 4:09 am IST
பகிர்:

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணியாற்றிவா்கள் விருது பெற ஜூன் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியா் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றுபவா்களுக்கு ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வரால் 10 கிராம் தங்கப் பதக்கம், ரூ.50,000 மற்றும் சான்றிதழும்,

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியாா் நிறுவனத்துக்கு 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளருக்கு 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

Advertisement

Advertisement

விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளா்கள், இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் விவரங்களைப் பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் ஜூன் 25-க்குள் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளபட மாட்டாது.

மேலும், விண்ணப்பத்தின் 2 நகல்களை ஜூன் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments