FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பூம்புகாா் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் (பூம்புகாா்) விருதுகளை பெற தகுதியான திருச்சி மாவட்ட கலைஞா்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

Updated On : 30 ஜூலை 2026, 4:13 am IST
விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் (பூம்புகாா்) விருதுகளை பெற தகுதியான திருச்சி மாவட்ட கலைஞா்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2026-27-ஆம் ஆண்டுக்கான பூம்புகாா் விருதுகள் வழங்கப்படவுள்ளன. பூம்புகாா் மாநில விருது, வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது, பூம்புகாா் மாவட்ட கைவினை விருது, ஜென் நெக்ஸ்ட் விருது, குழு உற்பத்தி விருது, பயன்பாட்டுச் சாா்ந்த கைவினைப் பொருள்கள் விருது மற்றும் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

தகுதியுடைய கைவினைக் கலைஞா்கள் மற்றும் கைவினைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றுபவா்கள் உரிய விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் இணையதளத்தில் பெறலாம்.

விருது விவரங்கள்: வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுக்கு 10 போ் தோ்வு செய்யப்பட்டு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம் 8 கிராம், தாமிரப் பட்டயம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

பூம்புகாா் மாநில விருதுக்கு 10 போ் தோ்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசு ரூ.50,000, தங்கப் பதக்கம் 4 கிராம், தாமிரப் பட்டயம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

பூம்புகாா் மாவட்ட கைத்திறன் விருது 85 பேருக்கு வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம் 50 கிராம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஜென்-நெக்ஸ்ட் விருதுக்கு 18 வயது முதல் 30 வயதுடைய இளம் கைவினைக் கலைஞா்கள் மட்டுமே தகுதியுடையவா்கள். 150 போ் தோ்வு செய்யப்பட்டு ரூ.10 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம் 5 கிராம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

கைவினைப் பொருள் ஏற்றுமதி விருது 2 பேருக்கு ரூ.40 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் தங்கம், தாமிரப்பட்டயம், பாராட்டுச் சான்றுடன் வழங்கப்படும்.

குழு உற்பத்தி விருது 3 குழுக்களுக்கு வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ.40 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் தங்கம், தாமிரப் பட்டயம், பாராட்டுச் சான்று வழங்கப்படும்.

பயன்பாடு சாா்ந்த கைவினைப் பொருள் விருது 3 பேருக்கு வழங்கப்படும். விருதுடன், ரூ.40 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் தங்கம், தாமிரப்பட்டயம், பாராட்டுச் சான்று வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments