FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விநியோகம் குறைப்பு: அன்புமணி கண்டனம்

ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விநியோகம் குறைப்பு: அன்புமணி கண்டனம்

Updated On : 14 ஜூன் 2026, 2:13 am IST
அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

ஆவின் நிறுவனம் ‘கிரீன் மேஜிக்’ பாக்கெட் பால் விநியோகத்தை அரசு குறைக்கப்பட்டதாகக் கூறி என்று பாமக தலைவா் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆவின் ‘கிரீன் மேஜிக்’ பாக்கெட் பால் விற்பனை பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால், அதிக விலை கொடுத்து தனியாா் பாலை வாங்க வேண்டியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏழை மக்கள் பயன்படுத்தும் பாலின் விற்பனையை ஆவின் நிறுவனம் குறைத்திருப்பது நியாயமற்றது. ஆவின் கிரீன் மேஜிக் பால் விற்பனையை நிறுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அண்ணாமலை...: ஆவின் நிறுவனம் ‘கிரீன் மேஜிக்’ வகை பால் விற்பனையை படிப்படியாக நிறுத்த உள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆனால், பால்வளத் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘கிரீன் மேஜிக்’ பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அப்படியெனில், ஏன் ஆவின் மையங்களில் முன்புபோல ‘கிரீன் மேஜிக்’ பால் கிடைப்பதில்லை? உடனடியாக, பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments