வில்லிவாக்கம் ஏரி புனரமைப்புப் பணிகள் நிறைவடைவது எப்போது?
வில்லிவாக்கம் ஏரி புனரமைப்புப் பணிகள் எப்போது நிறைவடையும்?
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, இடையே திமுக ஆட்சி மாறி, தவெக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், வில்லிவாக்கம் ஏரி புனரமைப்புப் பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடையே, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக வில்லிவாக்கம் ஏரி புனரமைப்புப் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
இதுவரை, வில்லிவாக்கம் ஏரி புனரமைப்புப் பணியில் இருந்த மிகப்பெரிய சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று இந்தப் புனரமைப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார்.
Advertisement
Advertisement
மிகவும் பரபரப்பான பகுதிக்குள் மிகப்பெரிய கட்டுமானப் பணிகள் தொடங்கிய போது மின் கம்பிகள், போக்குவரத்து, தளவாடப் பொருள்களைக் கொண்டு வருவது, ஆக்ரமிப்பு நிலங்கள் என பல பிரச்னைகள் எதிர்கொள்ளப்பட்டன.
வில்லிவாக்கம் ஏரி மீது பூங்கா அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவடையவிருக்கிறது. 100 அடி சாலையிலிருந்து இந்த பூங்காவை இணைக்க ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்படவிருக்கிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பீட்டில் வில்லிவாக்கம் ஏரி புனரமைப்பு திட்டப் பணியை அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்திருந்தார்.
இந்தப் பணிகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கண்ணாடி பாலம், நடைப்பாதை, குடிநீர் வசதி, பசுமைப் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
இசைக்கு ஏற்ப அசையும் தண்ணீர் ஊற்று, படகுச் சவாரி, மீன்பிடி தளம், குழந்தைகளுக்கான ரயில் சவாரி, நீரில் சரக்கும் விளையாட்டு, பறவைகள் பூங்கா, மீன்கள் காட்சியகம், குழந்தைகள் பூங்கா, உடற்பயிற்சிக் கூடம், உணவகம், வாகன நிறுத்துமிடங்கள், விளையாட்டு அரங்கம் என பலவகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
விரைவில் இந்த பூங்கா பணிகள் நிறைவு பெற்று ஒரு சில மாதங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
When will the Villivakkam Lake restoration work be completed?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.