அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 30 மாவட்டங்களில் மழை!
இரவு 7 மணி வரை சென்னை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது தொடர்பாக...
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 3.1 கிமீ உயரத்தில் வட தமிழக பகுதிகளிலிருந்து லட்சத்தீவு பகுதிகள் வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
சுமார் 1.5 கிமீ உயரம் வரை கிழக்கு உத்தரபிரதேசத்திலிருந்து, கிழக்கு மத்திய பிரதேசம், கிழக்கு விதர்பா மற்றும் தெலங்கானா வழியாக தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக இன்று(ஜூன் 17) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Chennai Regional Meteorological Centre has stated that there is a possibility of rain in 31 districts, including Chennai, over the next two hours.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.