ஆங்கிலேயரின் கொடுங்கோன்மையை எதிர்த்து நின்றவர் வாஞ்சிநாதன்: குடியரசு துணைத் தலைவர் புகழஞ்சலி
சுதேசி இயக்கத்தை ஒடுக்க ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட கொடும் நடவடிக்கைகளை அஞ்சாமல் எதிர்த்து நின்றவர் வாஞ்சிநாதன் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினார்.
நமது நிருபர்
சுதேசி இயக்கத்தை ஒடுக்க ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட கொடும் நடவடிக்கைகளை அஞ்சாமல் எதிர்த்து நின்றவர் வாஞ்சிநாதன் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினார்.
வாஞ்சிநாதனின் நினைவுநாளையொட்டி குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் "எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: விடுதலைப் போராட்ட வீரர், தியாகி வாஞ்சிநாதனின் நினைவு நாளில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், அவருக்கு மலரஞ்சலி செலுத்தினேன்.
Advertisement
Advertisement
அந்நிய ஆதிக்கத்தையும், சுதேசி இயக்கத்தை ஒடுக்க ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட கொடும் நடவடிக்கைகளையும் அஞ்சாமல் எதிர்த்து நின்றவர் அவர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரிட்டிஷ் கலெக்டர், விடுதலைப் போராட்ட வீரர்கள் மீது மேற்கொண்ட அடக்குமுறைகளுக்கு மணியாச்சி ரயில் நிலையத்தில் பழி தீர்த்து, தேசத்துக்காகத் தனது இன்னுயிரையும் அர்ப்பணித்தவர்.
அவரது ஒப்பற்ற வீரமும், நாட்டுப்பற்றும், தன்னலமற்ற தியாகமும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற வீரர்களுக்கு உந்துசக்தியாக அமைந்தன. இந்நாளில், தியாகி வாஞ்சிநாதன் அவர்களின் புகழை, போராட்ட வாழ்வை அனைவரும் நன்றியுடன் நினைந்து போற்றுவோம் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.