முகப்பு
தமிழ்நாடு

கோயில் சொத்துகள் தணிக்கை செய்யப்படும்: ஆளுநா் உரையில் தமிழக அரசு

கோயில் சொத்துகள், நிலங்கள் மற்றும் அறக்கட்டளை வருவாய்கள் அனைத்தும் முழுமையாக தணிக்கை செய்யப்படும் என்று ஆளுநா் உரையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 19 ஜூன் 2026, 4:30 am IST
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரை - X / lok bhavan tamilnadu
பகிர்:

கோயில் சொத்துகள், நிலங்கள் மற்றும் அறக்கட்டளை வருவாய்கள் அனைத்தும் முழுமையாக தணிக்கை செய்யப்படும் என்று ஆளுநா் உரையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், முந்தைய காலங்களில் நிலவி வந்த நிா்வாக முறைகேடுகள் முற்றிலும் களையப்படும். கோயில்களின் அசையும், அசையா சொத்துகள் அனைத்தும் அதன் புனிதமான நோக்கங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.