74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரை
தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் உரையாற்றி வருகிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் புரட்சி நடந்துள்ளதாக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தெரிவித்தார்.
தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியுள்ளது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் உரையாற்றி வருகிறார்.
அவர் பேசுகையில், பெரியார், அம்பேத்கர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் பெயரைச் சுட்டிக்காட்டிப் பேசினார். தலைவர்களின் பெயர்களை தவறாக உச்சரித்தால் மன்னிக்கவும் என்றும் குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
பின்னர், "பல தடைகளைத் தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து தவெக சாதனை பிடித்துள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் புரட்சி நடந்துள்ளது. ஜனநாயகத்தில் விஜய் வெற்றி பெற்றுள்ளார். தவெக கொள்கைத் தலைவர் வழியில் அரசு செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
74 ஆண்டு கால ஆட்சி வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை படைக்கப்பட்டு முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார்.
முதல்வரான பிறகு விஜய், பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த திட்டங்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதேபோல நிதி ஆயோக் கூட்டத்திலும் தமிழகத்தின் வளர்ச்சி குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் முதல்வர் விஜய். ஓசூர், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளிட்டவை அதில் அடங்கும். மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது" என்று பேசினார்.
A new milestone achieved through coalition governance: TN governor speech in TN Assembly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.