தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது பற்றி...
தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.
கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனா். மே 13-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
இதையடுத்து, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டது.
புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகா் உரையாற்றுகிறார். அவரின் ஆங்கில உரையை பேரவைத் தலைவா் ஜேசிடி. பிரபாகா் தமிழில் வாசிப்பாா்.
இந்த உரையில் தவெக அரசின் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், புதிய திட்டங்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The Tamil Nadu Legislative Assembly session has commenced!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.