முகப்பு
தமிழ்நாடு

ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்

சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தது குறித்து...

Updated On : 23 ஜூன் 2026, 10:38 am IST
பகிர்:

ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் இன்று(ஜூன் 23) பதிலளித்து சட்டப்பேரவையில் பேசி வருகிறார்.

அப்போது முதல்வர் விஜய் பேசுகையில், டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளையடித்தாகப் பேசினார்.

Advertisement

Advertisement

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

முதல்வர் தனது உரையை முடித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பேரவைத் தலைவர் தெரிவித்தார். எனினும் தொடர்ந்து, திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “திமுகவினர் எங்களைப் பார்த்து ஒருமையில் பேசுகின்றனர், அதை நான் கண்டிக்கிறேன். ’ஏய்’ என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் நீக்க வேண்டும்” என்றார்.

இதற்கு, பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் ’ஏய்’ என்ற வார்த்தை அவைக்குறிப்பில் இடம் பெறாது என்றார்.

summary

School Education Minister Rajmohan has requested Assembly Speaker J.C.T. Prabhakar to expunge the word "Hey" from the assembly records.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments