வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்
வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தது பற்றி...
வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் இன்று (ஜூன் 28) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:
Advertisement
Advertisement
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து போட்டிருந்தாலும் மீண்டும் தற்போது இந்த முகாமில் கலந்துகொண்டு போலியோ சொட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் என்னவென்றால், இதை ஒரே நேரத்தில் நாம் செயல்படுத்தினால்தான் சமுதாய நோய்ப்பரவலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதன் விளைவாக வெளிநாட்டிலிருந்து ஏதேனும் நோய் பரவினாலும் அதனை நாம் தடுக்க முடியும்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில், 2004-லேயே போலியோ ஒழிக்கப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரையில், 2024 -ல் உலக சுகாதார மையத்தினால் போலியோ இல்லாத நாடாக நாம் அறிவிக்கப்பட்டோம். இருப்பினும், நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் போலியோ நோய் இன்னும் இருப்பதால் அதை நாம் முற்றிலும் தடுக்க வேண்டும்.
நம் நாட்டில் போலியோ நோய் வரவே கூடாது என்பதால் இதுமாதிரியான போலியோ சொட்டுமருந்து முகாம்களை நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். ஆகையால், அனைத்துப் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டுமருந்து போட்டுக் கொள்ள வேண்டும்.
இதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். வெளியூரில் பயணம் செய்து கொண்டிருந்தாலும் அங்குள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற இடங்களிலும் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
Health Minister Arunraj stated on Sunday (June 28) that the polio vaccine also prevents diseases spreading from abroad.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.