நாகை எம்.பி. வை. செல்வராஜின் தந்தை வி. வைத்திலிங்கம் காலமானார்!
நாகை எம்.பி. வை. செல்வராஜின் தந்தை வி. வைத்திலிங்கம் காலமானார்.
நாகை எம்.பி. வை. செல்வராஜின் தந்தை வி. வைத்திலிங்கம் செவ்வாய்க்கிழமை காலமானார்.
நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினரும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினருமான வை. செல்வராஜின் தந்தை வி. வைத்திலிங்கம், மன்னார்குடியை அடுத்த சவளக்காரன் கீழநாலாநல்லூரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வி. வைத்திலிங்கம் இன்று (ஜூன் 30) காலமானார். அவருக்கு வயது 93.
Advertisement
Advertisement
அவரது இறுதிச் சடங்குகள் நாளை (ஜுலை 1 ) மாலை 4 மணிக்கு கீழநாலாநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலமான வைத்தியலிங்கத்துக்கு மனைவி ஆனந்தவள்ளி, நாகை எம்.பி. வை. செல்வராஜ் உள்பட 3 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.
தொடர்புக்கு: 94432 77300.
V. Vaithilingam, father of Nagai MP M. Selvaraj, passed away on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.