ஸ்டாலின் தொகுதியில் விஜய் பிரசாரம்!
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொண்டு வருவது தொடர்பாக...
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் இன்று(மார்ச் 30) தொடங்கியது.
கொளத்தூரில் மு. க. ஸ்டாலினும், பெரம்பூரில் விஜய்யும், காரைக்குடியில் சீமானும் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய், தனது தேர்தல் பிரசார பயணத்தை பெரம்பூரிலிருந்து இன்று தொடங்கினார். இதனைத் தொடர்ந்து கொளத்தூர் பேரவை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வி. எஸ். பாபுவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது தவெக தலைவர் விஜய் பேசுகையில், ”தமிழகம் இந்த நிலைக்கு செல்வதற்கு தீயசக்தி திமுகதான் காரணம். திமுக ஆட்சி விரைவில் விடைப்பெறபோகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, போதைப்பொருள்கள் அதிகமாக இருக்கும் இந்த அவலநிலைக்கு திமுக அரசுதான் காரணம். குழந்தைகள், பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லை, ஸ்டாலின் சாருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை” என்றார்.
கொளத்தூர் பேரவை தொகுதியில் விஜய்யைப் பார்ப்பதற்காக வழிநெடுகிலும் மக்கள் குவிந்திருந்தனர்.
TVK leader Vijay is conducting an election campaign in Chief Minister Stalin's Kolathur Assembly constituency.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.