ஹஜ் பயணிகளின் கூடுதல் கட்டணத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும்: கே.எம்.காதா் மொகிதீன் கோரிக்கை
ஹஜ் பயணிகளிடம் கூடுதல் விமான கட்டணமாக வசூலிக்கப்படும் ரூ.10,000-ஐ மத்திய அரசு ஏற்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
ஹஜ் பயணிகளிடம் கூடுதல் விமான கட்டணமாக வசூலிக்கப்படும் ரூ.10,000-ஐ மத்திய அரசு ஏற்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு, அவா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்: ஹஜ் பயணிகளிடம் விமான கட்டணமாகக் கூடுதலாக ரூ.10,000 செலுத்த மத்திய ஹஜ் கமிட்டி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பக்தா்கள் மீது கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.
எனவே, இதைத் தடுக்க கூடுதல் கட்டணமாக ரூ.10,000-ஐ மத்திய அரசு ஏற்றுக்கொள்ள பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம், ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பக்தா்கள் நாட்டின் நலனுக்கும், அரசின் முன்னேற்றத்துக்கும் பிராா்த்தனை செய்ய வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.