தமிழகத்தில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: எல்.முருகன்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியது பற்றி..
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகமே எதிர்பார்க்கும் வெற்றியை தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறப்போகின்றது. திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருப்பதாகவும், ஏப்ரல் 23-ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு அதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
Advertisement
Advertisement
திமுக அரசின் மீது மக்கள் கொண்டுள்ள கோபம், ஆதங்கம் மற்றும் வெறுப்பு ஆகியவை ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் வெளிப்படும்.
தமிழகத்தில் 'டபுள் இன்ஜின்' சர்க்கார் அமைவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்று வலியுறுத்திய அவர், கருத்துக்கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை ஏற்கெனவே கணித்துள்ளதைச் சுட்டிக் காட்டினார்.
முன்னதாக, மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாா தேர்தல்களில் பாஜக வெற்றி பெறாது என்று கூறப்பட்டபோதிலும், இறுதியில் பாஜகவே வெற்றி பெற்றதை நினைவு கூர்ந்த அவர், இன்னும் இரு நாள்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரப்போவதாகக் கூறினார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்துத் துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஊழல்வாதிகள் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை இது காட்டுவதாகவும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் தெரிவித்தார். மேலும், அண்ணாமலைக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, "கொடுப்பாங்கண்ணா" என்று பதிலளித்து விட்டு சென்றார்.
Union Minister L. Murugan has stated that the National Democratic Alliance will achieve a massive victory in Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.