முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! யார் எவருக்கு வாய்ப்பு?

தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 23 பேர் பற்றி...

தமிழக அரசு - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெறும் நிலையில், 23 பேர் கொண்ட அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

மே 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

Advertisement

Advertisement

இதனிடையே, தவெக கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதிதாக பதவியேற்கவுள்ள 23 அமைச்சர்களின் பட்டியலை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

இதில், சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவரும் கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ ஆன ராஜேஷ் குமாா், மேலூா் தொகுதி எம்எல்ஏ பெ. விஸ்வநாதன் ஆகியோா் அமைச்சா்களாக பதவியேற்கவுள்ளனர்.

முதல்வர் விஜய்யின் நண்பரும் தூத்துக்குடி எம்.எல்.ஏ.வுமான ஸ்ரீநாத், மத்திய அமைச்சர் எல். முருகனை அவிநாசியில் தோற்கடித்த இளம் எம்.எல்.ஏ. கமலி உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முழுப் பட்டியல்

தூத்துக்குடி - ஸ்ரீநாத், அவிநாசி - எஸ். கமலி, குமாரபாளையம் - சி. விஜயலட்சுமி, காஞ்சிபுரம் - ஆர்.வி. ரஞ்சித்குமார், கும்பகோணம்- வினோத், திருவாடானை - ராஜீவ், கடலூர் - பி. ராஜ்குமார், அரக்கோணம் - வி. காந்திராஜ், ஒட்டப்பிடாரம் - மதன் ராஜா. பி, ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி. கே, கிள்ளியூர் - ராஜேஷ் குமார். எஸ், ஈரோடு கிழக்கு - எம். விஜய் பாலாஜி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

ராசிபுரம் - லோகேஷ் தமிழ் செல்வன், சேலம் தெற்கு - விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் - ரமேஷ், மேலூர் - விஸ்வநாதன், வேளச்சேரி - குமார், கோவை வடக்கு - சம்பத் குமார், அறந்தாங்கி - முகமது ஃபர்வாஸ், தாம்பரம் - சரத்குமார், ராதாகிருஷ்ணன் நகர் - மேரி வில்சன், கிணத்துக்கடவு - விக்னேஷ், ஸ்ரீபெரும்புதூர் - தென்னரசு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில் விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம்பெறவில்லை.

பின்னர், இரு கட்சிகள் சார்பில் அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Tamil Nadu Cabinet expansion - 23 new minister list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments