முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் நிர்மல் குமாருக்காக திருப்பரங்குன்றம் கோயில் நடை தாமதமாக அடைப்பு! உயர் நீதிமன்றம் கேள்வி

அமைச்சர் நிர்மல் குமாருக்காக திருப்பரங்குன்றம் கோயில் நடை தாமதமாக அடைக்கப்பட்டது குறித்து உயர் நீதிமன்றம் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது.

திருப்பரங்குன்றம் - கோப்புப்படம்
பகிர்:

அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்வதற்காக திருப்பரங்குன்றம் கோயிலில் நடை தாமதமாக அடைக்கப்பட்டது குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்துக்குக்காக தாமதமாக நடை அடைக்கப்பட்டது குறித்து அறநிலையத்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோயிலில் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் கடந்த 15-ஆம் தேதி தரிசனம் செய்தார்.

Advertisement

Advertisement

வழக்கமாக கோயில் நடை பகல் 12.45 மணிக்கு சாத்தப்படும். ஆனால் அமைச்சருக்காக கோயில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அமைச்சரின் தரிசனத்துக்கு பிறகே கோயில் நடை அடைக்கப்பட்டது. அதேபோல, கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த விடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது, நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறை குறித்து அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

மேலும், திருப்பரங்குன்றத்திற்கு அமைச்சர் சென்றபோது என்ன நடந்தது? என்பது குறித்து அறநிலையத்துறை செயலர், அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.