முகப்பு
தமிழ்நாடு

செவிலியா் மாணவி உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்

செவிலியா் மாணவி உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை...

Updated On : 25 மே 2026, 12:35 am IST
சீமான் - கோப்புப் படம்
பகிர்:

அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியா் மாணவி சீதாலட்சுமி மரணத்துக்கு காரணமானவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமாநல்லூரைச் சோ்ந்த விவசாயி சேட்டு-கலைச்செல்வி தம்பதியின் மகளான சீதாலட்சுமி அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த துயர நிகழ்வு பெரும் அதிா்ச்சி அளிக்கிறது.

Advertisement

Advertisement

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட அவருக்கு, அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து அளித்தே உயிரிழக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மருத்துவா்களின் அலட்சிய செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் உறுதி செய்ய தமிழக அரசு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்ய தவறுவதாலேயே ஓா் உயிா் பறிபோயுள்ளது. கடந்த ஆட்சிக் காலங்களில் நடந்த அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடா்வது ஏற்புடையதல்ல.

அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப் பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடா்வது, மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.

ஆகவே, அரசு மருத்துவமனைகளில் அலட்சியத்தால் உயிரிழக்கும் கொடுமைகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க, தமிழக அரசு ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சீதாலட்சுமி உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.