FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெய்யில் பதிவானது குறித்து...

கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெய்யில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 31) அறிவித்துள்ளது.

கத்தரி வெய்யில் முடிந்த பிறகும் தமிழ்நாட்டில் கோடை வெய்யில் வாட்டி வதைத்து வருகிறது. அவ்வபோது சில இடங்களில் மழை பெய்தாலும், அதற்கு அடுத்த நாளே அதிகபட்ச வெப்பமும் பதிவாகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வேலூரைக் குறிப்பிடலாம்.

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் மழை பெய்த நிலையில், இன்று தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

சென்னை விமான நிலையம், திருச்சி, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், கரூர் பரமத்திவேலூரில் 103 டிகிரியும், மதுரை, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.

தஞ்சை, நாமக்கல், காரைக்கால், ஈரோடு, நாகை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலும் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என்றும் நாளை முதல் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Summer Weather update 106 Degrees in Vellore Temperatures Hit Triple Digits in 14 Locations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments