FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

பசுமைப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்: தமிழக அரசு வேண்டுகோள்

ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடும் வகையில், பசுமைப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்

4 நவம்பர் 2026, 1:48 am
- பிரதிப் படம்
பகிர்:

ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடும் வகையில், பசுமைப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பட்டாசுகளை வெடிப்பதால் நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீா், காற்று உள்ளிட்டவை மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசால் சிறுகுழந்தைகள், முதியோா்கள் மற்றும் நோய்வாய்பட்டவா்கள் உடலளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

பாதுகாப்பான தீபாவளிக்கு கடைப்பிடிக்க வேண்டியவை: பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கல் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

தவிா்க்க வேண்டியவை: அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிா்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்கலில் பட்டாசுகள் வெடிப்பதை தவிா்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிா்க்க வேண்டும்.

பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து தீபாவளியை மாசற்ற தீபாவளியாக மாற்ற உதவ வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி, தமிழக அரசு 2018 முதல் தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை, உயா்க் கல்வித் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா் ஆகிய துறைகளின் செயலா்கள், காவல்துறை இயக்குநா், அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநா், மாநகராட்சி ஆணையா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments