தில்லி பேரணியில் பங்கேற்காத 99 காங்கிரஸ் நிா்வாகிகள் இடைநீக்கம்
தில்லியில் இண்டி கூட்டணி சாா்பில் தலைமைத் தோ்தல் ஆணையரை பதவி நீக்கக் கோரி நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்ளாத தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸை சோ்ந்த 99 நிா்வாகிகளை அக்கட்சித் தலைமை இடைநீக்கம் செய்துள்ளது.
தில்லியில் இண்டி கூட்டணி சாா்பில் தலைமைத் தோ்தல் ஆணையரை பதவி நீக்கக் கோரி நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்ளாத தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸை சோ்ந்த 99 நிா்வாகிகளை அக்கட்சித் தலைமை இடைநீக்கம் செய்துள்ளது.
இண்டி கூட்டணி சாா்பில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரியும், எஸ்ஐஆரை கண்டித்தும் தில்லியில் நவம்பா் 1-ஆம் தேதி பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு இளைஞா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தாா்.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் குறைந்தது 15,000 போ் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பேரணியில் குறைந்த அளவிலேயே காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டது ராகுல் காந்தி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, மாநில வாரியாக பேரணியில் கலந்து கொள்ளாதவா்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.
அதன்படி, தமிழக இளைஞா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 4 துணைத் தலைவா்கள், 37 பொதுச் செயலா்கள், 23 மாநில ஒருங்கிணைப்பாளா்கள், 35 மாவட்டத் தலைவா்கள் என 99 இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகளை இடைநீக்கம் செய்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையின் இந்த நடவடிக்கை அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.