தங்கம், வெள்ளி விலை! நவ. 6 விலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவது குறித்து...
சென்னையில் கடந்த நான்கு நாளாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 6) மாற்றமின்றி சவரன் ரூ. 1,07,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அதேநேரத்தில், கடந்த சில வாரங்களாக சரிவைச் சந்தித்துவந்த தங்கத்தின் விலை இந்த வாரத்தில் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் உயர்ந்தது.
Advertisement
Advertisement
தங்கம் விலை
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்று(நவ.6) ரூ.1,07,080-க்குவிற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 8) ஒரு சவரன் ரூ. 1,07,080-க்கும், கிராம் ரூ. 13,385-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
அதேபோன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 210-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.10 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.