FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

பெரியார் அறிவுலக ஊழலுக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...

51 வினாடிகள் முன்பு
கமல்ஹாசன் - கோப்புப் படம்
பகிர்:

பெரியார் அறிவுலகத்தில் உள்ள போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் திமுக ஆட்சியில் கட்டப்பட்டு, கடந்த மாதம் முதல்வர் ச. ஜோசப் விஜய்யால் திறந்துவைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

போலி பதிப்பகங்கள், போலி எழுத்தாளர்கள், தவறான தகவல்கள் என ஆயிரக்கணக்கான நூல்கள் இடம்பெற்றிருப்பது பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த சம்பவத்துக்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.

இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.

இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Periyar Arivulagam Corruption - Spurious books should be dumped on the streets and set ablaze— Kamal’s impassioned outburst

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.