FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அண்ணாமலை பதிவிட்டிருப்பது பற்றி...

17 செப்டம்பர் 2026, 10:43 am IST
அண்ணாமலை - X
பகிர்:

சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டவர் பெரியார் என்று ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அரசியல் தலைவர்களும் முக்கிய பிரபலங்களும் பெரியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவருமான கே. அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அவரின் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியாரின் பிறந்த தினம் இன்று.

சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியாரின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த செப். 15 ஆம் தேதி, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்றும் அண்ணாமலை வாழ்த்தி புகழாரம் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Periyar lived in opposition to social inequalities! K Annamalai heaps praise!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments