FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!

கோவையில் பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்...

12 வினாடிகள் முன்பு
கோவையில் பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்... - DIPR
பகிர்:

கோவை காந்திபுரத்தில் நவீன முறையில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் இன்று (அக்.16) திறந்துவைத்தார்.

கோவை காந்திபுரத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம். கடந்த 2024 ஆம் ஆண்டு முந்தைய திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் 2026ல் பணிகள் முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.

விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை 11 மணியளவில் கோவை வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக வேனில் சாலைவலம் மேற்கொண்டார். அவருக்கு வழிநெடுக தொண்டர்கள், மக்கள் வரவேற்பு அளித்தனர்.

Advertisement

Advertisement

நண்பகல் 12 மணியளவில் காந்திபுரம் பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார். நூலக முகப்பில் உள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலக கல்வெட்டை திறந்துவைத்தார். இதைடுத்து அங்குள்ள படைப்புகளை அவர் பார்வையிட்டு வருகிறார்.

தொடர்ந்து அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

சிறப்புகள்

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் சுமாா் 7 ஏக்கா் பரப்பில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பொதுப் பணித் துறை சாா்பில் பெரியாா் அறிவுலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 8 தளங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகம், ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ நூலகம், 350 போ் அமரக்கூடிய அதிநவீன அரங்கம் மற்றும் அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், விண்வெளி குறித்த நேரடி அனுபவத்தை பெறும் வகையில் கோளரங்கம் மற்றும் ‘ஸ்பேஸ் லிஃப்ட்’ வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் நூலகம் மற்றும் அறிவியல் சாா்ந்த வசதிகள் தகுந்த முறையில் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட நூலகம், எண்ம (டிஜிட்டல்) நூலகம், தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாற்று நூல்கள் பிரிவுகள், ஆராய்ச்சி படிப்பகங்கள், குழந்தைகள் நூலகம் மற்றும் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்கான ‘இன்குபேஷன்’ மையம் ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

summary

CM Vijay inaugurated the Periyar Centre for Knowledge in Coimbatore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments