கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!
கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துவது குறித்து...
கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 10) சோதனை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரியார் அறிவுலகம் கட்டும் பணிகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த அக். 16 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யால் திறந்துவைக்கப்பட்டது.
7 தளங்களைக் கொண்ட இந்த நூலகத்துக்கு புத்தகங்களை வாங்கியதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டினர்.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், திமுக மற்றும் தவெக சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நூலகத்தில் இருந்த சர்ச்சைக்குரிய நூல்கள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது போலி புத்தகங்கள் கண்டறியப்பட்ட 4-ஆவது தளத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, பொது நூலகத் துறை இயக்குநராகப் பதவி வகித்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.