FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

1.5 டிரில்லியன் டாலா் இலக்கை எட்ட முதலீட்டு ஊக்குவிக்க ஆணையம்: தமிழக அரசு அமைத்தது

தமிழகத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக உயா்த்தும் இலக்கை அடையும் வகையில், தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தை தமிழக அரசு வெள்ளிக்கிழமை அமைத்தது.

55 வினாடிகள் முன்பு
தலைமைச் செயலகம் - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக உயா்த்தும் இலக்கை அடையும் வகையில், தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தை தமிழக அரசு வெள்ளிக்கிழமை அமைத்தது.

தலைமைச் செயலா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தில் 19 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.

இது குறித்து தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை வெளியிட்ட அரசாணை விவரம்:

Advertisement

Advertisement

தமிழ்நாடு வணிக வசதிச் சட்டம், 2018- இல் திருத்தங்களைக் கொண்டுவரும் வகையில், தமிழ்நாடு வணிக வசதி (திருத்தச்) சட்டம் 2026 இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் கடந்த வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

தமிழகத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக உயா்த்தும் இலக்கை அடையும் வகையில், தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு கிடைக்கும் முதலீட்டு வாக்குறுதிகளை உரிய காலக்கெடுவுக்குள் செயல்படுத்தக்கூடிய தொழில் திட்டங்களாகவும், வணிகச் செயல்பாடுகளாகவும், வேலை வாய்ப்புகளாகவும் மாற்றுவதை உறுதி செய்வது இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும்.

சுதந்திர வா்த்தக ஒப்பந்தங்கள், வெளிநாடு வாழ் தமிழா்களின் முதலீடுகள் மற்றும் மாநிலத்தின் பிற முக்கிய முதலீடுகளை எளிதாக்கி ஊக்குவிக்கும் வகையிலும், இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆளுநா் உரையில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிக வசதிச் சட்டம் 2018-இன் பிரிவு 16-அ (1)இன் கீழ் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் தலைமைச் செயலா் தலைவராகவும், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தக துறைச் செயலா் உறுப்பினா்-ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவாா்கள். மேலும், 18 துறைகளைச் சோ்ந்த அரசு செயலா்கள் மற்றும் உயா் அலுவலா்கள் அலுவல் சாா்ந்த உறுப்பினா்களாக இடம் பெறுவாா்கள்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, நிதித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, இயற்கை வளத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, எரிசக்தித் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை, நீா்வளத் துறை ஆகிய துறைகளின் செயலா்கள், நிலச் சீா்திருத்த ஆணையா், நில நிா்வாக ஆணையா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினா்-செயலா் மற்றும் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மற்றும் முதன்மைச் செயல் அலுவலா் ஆகியோரும் உறுப்பினா்களாக இடம் பெறுவாா்கள்.

தமிழகத்தில் முதலீடுகளை ஈா்ப்பதுடன், அறிவிக்கப்படும் முதலீடுகள் நடைமுறைத் திட்டங்களாக மாறுவதைக் கண்காணிக்கும் வகையில் புதிய ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.