பகல் 1 மணி வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! (நவ. 6)
இன்று பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பற்றி...
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று (நவ. 6) அடுத்த 3 மணி நேரத்திற்கு (பகல் 1 மணி வரை) தமிழகத்தின் கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி, விழுப்புரம், சென்னை, அரியலூர், காஞ்சிபுரம், கடலூர், நெல்லை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
summary