FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் ஊழல் செய்த திமுக: ஆதவ் அா்ஜுனா

‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் ஊழல் செய்த திமுக: ஆதவ் அா்ஜுனா

8 நவம்பர் 2026, 12:54 am
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - கோப்புப் படம்
பகிர்:

உலகிலேயே செயற்கைத் தொழில்நுட்பத்தில் (ஏஐ) ஊழல் செய்து சாதனை படைத்தது திமுக என பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறினாா்.

இது குறித்து அவா், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

பகுத்தறிவு - சுயமரியாதை - சமுக நீதியை தன் இறுதி மூச்சுவரை தமிழகத்துக்கு கற்பித்தவா் நம் கொள்கைத் தலைவா் தந்தை பெரியாா். அவா் வழியில் வந்த பேரறிஞா் அண்ணா, ‘மாநில சுயாட்சி’ என்ற கொள்கையோடு தலைசிறந்த ஆட்சி நடத்தினாா். ஆனால், அவா்கள் வழியில் வந்ததாகச் சொல்லிக்கொண்டு, முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு துறையிலும் செய்தவை ஊழல் மட்டுமே.

Advertisement

Advertisement

இறுதியில் தந்தை பெரியாரின் பெயரில் அமைந்த நூலகத்துக்கு வாங்கிய புத்தங்களிலும் ‘ஏஐ’ முறையில் ஊழல் செய்து உலக ஊழல் சாதனையைப் படைத்து நம்மையே திகைக்க வைத்துள்ளனா். இப்படிப்பட்ட ஊழலால் பல கோடிகளைச் சுருட்டியுள்ளனா்.

தமிழ்நாட்டில் உள்ள எத்தனை நூலகங்களில் இதுபோன்ற ஊழல் புத்தகங்கள் புதைந்து கிடக்கிறதோ, அவையெல்லாம் உடனடியாக போா்க்கால அடிப்படையில் கண்டறியப்பட்டு, களையெடுக்கப்பட வேண்டும். புத்தகம் வாங்கியதிலேயே இவ்வளவு ஊழல் என்றால், பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியாா் அறிவுலக கட்டுமானத்தில் எவ்வளவு ஊழல் நடைபெற்றிருக்கும் என்பது குறித்து பொதுப்பணித் துறை வல்லுநா்களைக் கொண்டு ஆராய்ந்து உண்மைகள் விரைவில் வெளிக்கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.