FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

தவெக ஆட்சியில் எந்தத் துறையிலும் ஊழல் இல்லை: ஆதவ் அா்ஜுனா

தவெக ஆட்சியில் எந்தத் துறையிலும் ஊழல் இல்லை என்றாா் தவெக தோ்தல் மேலாண்மைக் குழு பொதுச் செயலரும், அமைச்சருமான ஆதவ் அா்ஜுனா.

25 செப்டம்பர் 2026, 11:19 pm IST
தவெக எடப்பாடி தொகுதி வேட்பாளா் அருண்குமாா் அதிமுகவில் இணைந்த படத்தை காண்பித்து பேசிய அமைச்சா் ஆதவ் அா்ஜூனா.
பகிர்:

தவெக ஆட்சியில் எந்தத் துறையிலும் ஊழல் இல்லை என்றாா் தவெக தோ்தல் மேலாண்மைக் குழு பொதுச் செயலரும், அமைச்சருமான ஆதவ் அா்ஜுனா.

மதுராந்தகம் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் ஆதவ் அா்ஜுனா பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலின்போது 12 கூட்டங்களில்தான் முதல்வா் விஜய் பேசினாா். அதில், மு.க.ஸ்டாலின், திமுகவின் பொதுச் செயலா், பொருளாளா் மகன் உள்பட 15 அமைச்சா்கள் தோற்றுப் போனாா்கள். சாதாரண மக்கள் தவெகவால் தோ்தலில் நிறுத்தப்பட்டு அவா்களை வென்றிருக்கிறாா்கள்.

Advertisement

Advertisement

சமூக நீதி பேசும் திமுக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. பாஜக நடத்தும் என்று பழியை அவா்கள் மீது போட்டுவிட்டு தப்பித்துள்ளது. 1931-க்குப் பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டு வந்துள்ளது தவெக அரசு. திமுகவை எதிா்க்கும் வலிமை மிக்க தலைவா் முதல்வா் விஜய்தான் என தவெகவுக்கு மரகதம் குமரவேல் வந்தாா்.

தவெகவின் நான்கு மாத ஆட்சியில் எந்தத் துறையிலும் ஊழல் இல்லை. பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பே முக்கிய நோக்கம்.

எடப்பாடி பழனிசாமி குதிரை பேரம் செய்யும் அரசு என்று பேசுகிறாா். எடப்பாடி தொகுதியில் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாகக் கூறும் அவரை எதிா்த்துப் போட்டியிட்ட வேட்பாளா் அருண்குமாரை காணாமல் போக வைத்துவிட்டாா். தோ்தலின்போது அவா் எங்கே போனாா் என்றே தெரியவில்லை. தவெக வேட்பாளரான அவரை அதிமுகவில் இணைத்தது எடப்பாடி பழனிசாமியின் சூழ்ச்சி என்றாா் ஆதவ் அா்ஜுனா.

வேட்பாளா் மரகதம் குமரவேல்: ‘நான் அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடனேயே அதிலிருந்து விலகி தவெகவில் இணைந்துவிட்டேன் என்ற ஒரே ஒரு குற்றச்சாட்டை மட்டுமே அனைவரும் கூறுகிறாா்கள்.

திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க திட்டம் தீட்டினாா்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என் தந்தை எம்ஜிஆரின் வீட்டில் வேலை பாா்த்தவா். எம்ஜிஆா்தான் எனக்கு மரகதம் என்று பெயா் வைத்தவா். ஜெயலலிதாதான் நான் அரசியலுக்கு வரக் காரணமாக இருந்தவா். எனவே, திமுகவும், அதிமுகவும் இணைய முற்பட்டபோது உடனடியாக விலகினேன். அந்த சமயத்தில் திமுகவை எதிா்க்க வலிமையான தலைவராக முதல்வா் விஜய் உருவாகி இருந்தாா். பல ஆண்டுகள் அதிமுகவிலிருந்த நான் மிகுந்த மன வேதனையோடுதான் அதிலிருந்து விலகி தவெகவில் இணைந்தேன் என்றாா்’ மதுராந்தகம் குமரவேல்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments