FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குதிரை பேரம் வழக்கு: அதிமுக நிர்வாகி மன்னனிடம் 2-வது நாளாக விசாரணை!

குதிரை பேரம் விவகாரம் தொடர்பாக அதிமுக நிர்வாகி மன்னனிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெறுவது பற்றி...

39 வினாடிகள் முன்பு
அதிமுக நிர்வாகி மன்னன். - கோப்புப்படம்.
பகிர்:

குதிரை பேரம் விவகாரம் தொடர்பாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன் ஆஜரான அதிமுக நிர்வாகி மன்னனிடம் 2-வது நாளாக சனிக்கிழமையும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து எதிராக வாக்களிக்க தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக சட்டப்பேரவை உறுப்பினர் மதார் பதுருதீன் (எ) முஸ்தபா கடந்த புதன்கிழமை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, எம்.எல்.ஏ முஸ்தபா அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் துணை மேயரும் அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலருமான பி.எம். மன்னனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை காலை கைது செய்தனர்.

Advertisement

Advertisement

முன்னதாக, மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் மாநகரக் காவல் துணை ஆணையர் திவ்யா தலைமையிலான போலீஸார் மன்னனிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். அப்போது, அவரது கைப்பேசி உரையாடல் பதிவுகள், தொடர்புகொண்ட நபர்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணைக்குப் பிறகு, மன்னனை மாவட்ட நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி ஆர். ஜோசப் ஜாய் முன் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

அப்போது, நவம்பர் 7-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை கொடுத்துவிட்டு, நவம்பர் 6-ஆம் தேதியே அவரை விசாரிக்க அழைத்துச் சென்று கைது செய்தது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, மன்னனை ரூ. 25,000 சொந்த பிணையில் விடுவித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக சனிக்கிழமை (நவ. 7) மீண்டும் விசாரணை அதிகாரியிடம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி, மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு அதிமுக நிர்வாகி பி.எம். மன்னன் சனிக்கிழமை மீண்டும் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

summary

The Allegation: AIADMK Propaganda Deputy Secretary and former Madurai Deputy Mayor, P. M. Mannan, is accused of attempting to offer a bribe of rs15 crore to rs 30 crore to Tamizhaga Vetri Kazhagam (TVK) Madurai Central MLA Madhar Badruddin (Mustafa).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.