பட்டாசு கழிவுகளை அகற்ற சென்னையில் 600 தூய்மைப் பணியாளர்கள்!
பட்டாசு கழிவுகளை எடுத்துச் செல்ல தூய்மைப் பணியாளர்களுக்கு 350 வாகனங்கள் தனியாக வழங்கப்பட்டுள்ளது குறித்து...
சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்ற மாநகராட்சி சார்பில் 600 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பட்டாசுக் கழிவுகளை எடுத்துச் செல்ல 350 வாகனங்களும் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி பட்டாசுக் கழிவுகளை தனியாக எடுத்துச் சென்று அப்புறப்படுத்துவதற்காக 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30 ஆயிரம் பைகளும் வழங்கப்பட்டுள்ளன.
பட்டாசுக் கழிவுகளை உரிய முறையில் எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனால், மக்கள் அனைவரும் வீட்டுக் குப்பையுடன் பட்டாசுக் கழிவுகளையும் சேர்க்காமல், தனியாக வைத்திருந்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னையைத் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.