FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

33 அடி உயர ஆஞ்சனேயர் கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு!

33 அடி உயர ஆஞ்சனேயர் கோயிலில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு வழிபாடு குறித்து...

திருவோணமங்கலம் ஆஞ்சனேயர் கோயில் - படம் - தினமணி
பகிர்:

திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள ஆஞ்சனேயர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) தீபாவளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள 33 அடி உயர சங்கடஹரமங்கலமாருதி ஆஞ்சனேயர் கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு இன்று நடைபெற்றது.

தீபாவளி சிறப்பு வழிபாட்டில் பக்தர்களுக்கு அருள்பாலித்த திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள 33 அடி உயர சங்கடஹரமங்கல மாருதி ஆஞ்சனேயர் - படம் - தினமணி

இதனைமுன்னிட்டு, நவ. 7 ஆம் தேதி இரவு ராமர்பாதம், விநாயகர், 33 அடி உயர ஆஞ்சனேயர், சீதா, லெட்சுமணர், அனுமன் சமேத கோதண்டராமர், லெட்சுமி நரசிம்மர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை தீபாவளியை முன்னிட்டு அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டது. சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஆலங்குடி குருபகவான். - படம் - தினமணி

இதேபோல் நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாட்டில் வெள்ளிக்கவச அலங்காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

summary

A special Diwali worship service was held on Sunday (Nov. 8) at the Anjaneyar Temple located in Gnanapuri, Thiruvonamangalam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.