இதுவரை 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி
இதுவரை 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது குறித்து...
இதுவரை 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை (நவ. 9) தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், மக்கள் காலை முதல் இரவு வரை பட்டாசு வெடித்தனர்.
இதனால், சர்வதேச அளவிலான காற்றின் தரக் குறியீட்டுப் பட்டியலில் 907 புள்ளிகளுடன் மிக மோசமான பிரிவில் நேற்று சென்னை இடம்பெற்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணி இன்று காலை முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி தெரிவித்திருப்பதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், தீபாவளியைத் தொடர்ந்து பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இப்பணிகளை விரைவுபடுத்த 600 கூடுதல் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து, அவை முழுமையாகக் குளிர்ந்த பிறகு மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்து, மாநகரின் தூய்மையைப் பராமரிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.