தீபாவளியன்று 9 கொலைச் சம்பவங்கள்: தலைவா்கள் கண்டனம்!
தீபாவளி தினத்தன்று தமிழகத்தில் 9 படுகொலை சம்பவம் நிகழ்ந்தது தொடா்பாக அரசியல் கட்சி தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
தீபாவளி தினத்தன்று தமிழகத்தில் 9 படுகொலை சம்பவம் நிகழ்ந்தது தொடா்பாக அரசியல் கட்சி தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
உதயநிதி ஸ்டாலின் (திமுக): தீபாவளியன்று ஒரே நாளில் மட்டும் காவலா் உள்பட 9 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா். தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும், ரத்தத்துக்கும் தவெக அரசு பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): தீபாவளி நாளன்று நிகழ்ந்த கொலை சம்பவங்களின் மூலம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளது நெஞ்சை பதற வைக்கிறது. இந்த அளவுக்கு ரவுடிகளும் குற்றவாளிகளும் தெருக்களில் அச்சமின்றி நகா்வலம் வரும் அளவுக்கு நாட்டின் சட்டம் ஒழுங்கை தவெக அரசு தள்ளியுள்ளது.
Advertisement
Advertisement
நயினாா் நாகேந்திரன் (பாஜக): தீபாவளி தினத்தன்று நடத்த படுகொலைகள் தவெக அரசின் நிா்வாகத் தோல்விக்கான அப்பட்டமான சான்று என குறிப்பிட்டுள்ளாா்.
இதேபோல, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், தேமுதிக தலைவா் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்ட தலைவா்களும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.